ஆன்மிகம்

இன்றைய ராசிபலன்கள் புதன்கிழமை 15-09-2021.!!

இன்றைய (15-09-2021) ராசி பலன்கள்

மேஷம்

குடும்பத்தில் மகிழ்ச்சி தரும் செய்திகள் கிடைக்கப் பெறுவீர்கள். பணிபுரியும் இடத்தில் உயர் அதிகாரிகள் ஆதரவாக இருப்பார்கள். பணவரவுகள் தாராளமாக இருக்கும். வியாபார பணிகளில் இருந்துவந்த மந்த தன்மைகள் படிப்படியாக குறையும். நண்பர்களின் ஒத்துழைப்புகளால் மேன்மையான வாய்ப்புகள் கிடைக்கப் பெறுவீர்கள். ஆபரண பொருட்கள் மீதான ஆர்வம் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

அஸ்வினி : மகிழ்ச்சியான நாள்.
பரணி : ஆதரவுகள் கிடைக்கும்.
கிருத்திகை : ஆர்வம் அதிகரிக்கும்.

ரிஷபம்

மனதில் பலதரப்பட்ட சிந்தனைகள் ஏற்பட்டு நீங்கும். எதிர்பாராத சில செலவுகள் மூலம் நெருக்கடியான சூழ்நிலை உண்டாகும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் கவனத்துடன் செயல்படவும். குடும்ப உறுப்பினர்களிடம் வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. வெளியூர் பயணங்களின் போது தேவையான ஆவணங்களை எடுத்துச் செல்லவும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்

கிருத்திகை : சிந்தனைகள் ஏற்படும்.
ரோகிணி : கவனத்துடன் செயல்படவும்.
மிருகசீரிஷம் : வாதங்களை தவிர்க்கவும்.

மிதுனம்

கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். மனதில் புதுவிதமான ஆசைகள் உருவாகும். புதிய நபர்களின் அறிமுகத்தின் மூலம் மாற்றமான சூழ்நிலைகள் உண்டாகும். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் லாபகரமான சூழ்நிலையை ஏற்படுத்தும். வர்த்தகம் தொடர்பான பணிகளில் முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

மிருகசீரிஷம் : நெருக்கம் அதிகரிக்கும்.
திருவாதிரை : மாற்றமான நாள்.
புனர்பூசம் : வாய்ப்புகள் கிடைக்கும்.

கடகம்

மனதில் இருந்துவந்த கவலைகள் நீங்கி புத்துணர்ச்சியாக காணப்படுவீர்கள். ஆரோக்கியம் தொடர்பான செயல்பாடுகளில் விழிப்புணர்வு வேண்டும். விவசாயம் தொடர்பான கடன் உதவிகள் சிலருக்கு சாதகமாக அமையும். உத்தியோகம் தொடர்பான முயற்சிகளில் சாதகமான வாய்ப்புகள் அமையும். இழுபறியாக இருந்துவந்த பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : பொன் நிறம்

புனர்பூசம் : புத்துணர்ச்சியான நாள்.
பூசம் : வாய்ப்புகள் கிடைக்கும்.
ஆயில்யம் : தீர்வுகள் ஏற்படும்.

சிம்மம்

எந்த ஒரு செயலையும் செய்து முடிக்க முடியும் என்ற தன்னம்பிக்கை மேம்படும். உத்தியோக பணிகளில் முயற்சிக்கு ஏற்ப பதவி உயர்வு கிடைக்கப் பெறுவீர்கள். குடும்ப உறுப்பினர்களிடம் அனுசரித்து செல்ல வேண்டும். வியாபாரம் தொடர்பான செயல்பாடுகளில் வேலையாட்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். உறவினர்கள் வழியில் சுபச்செய்திகளும், அலைச்சல்களும் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம்

மகம் : தன்னம்பிக்கை மேம்படும்.
பூரம் : உயர்வான நாள்.
உத்திரம் : ஒத்துழைப்பு அதிகரிக்கும்.

கன்னி

உயர் அதிகாரிகளிடத்தில் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். நிர்வாகம் தொடர்பான பணிகளில் திறமைகளை வெளிப்படுத்தி பாராட்டுகளைப் பெறுவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனத்துடன் இருக்க வேண்டும். வியாபாரம் தொடர்பான பணிகளில் கூட்டாளிகள் ஒத்துழைப்புடன் செயல்படுவார்கள். குடும்ப உறுப்பினர்களை அனுசரித்து செல்வது நல்லது.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம்

உத்திரம் : கருத்து வேறுபாடுகள் நீங்கும்.
அஸ்தம் : பாராட்டுகள் கிடைக்கும்.
சித்திரை : அனுசரித்து செல்லவும்.

துலாம்

உடனிருப்பவர்கள் பற்றிய புரிதல்கள் மேம்படும். காப்பீடு தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு லாபகரமான வாய்ப்புகள் அமையும். முயற்சிக்கு ஏற்ப முன்னேற்றம் ஏற்படும். உறவினர்களின் வருகையினால் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் காணப்படும். வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் ஏற்படும். தனவரவை மேம்படுத்துவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்

சித்திரை : புரிதல்கள் மேம்படும்.
சுவாதி : முன்னேற்றம் உண்டாகும்.
விசாகம் : ஆர்வம் பிறக்கும்.

விருச்சிகம்

எதிர்பாராத தனவரவுகள் கிடைக்கப் பெறுவீர்கள். குடும்பத்தில் உள்ள பெரியவர்களிடத்தில் நன்மதிப்பை பெறுவீர்கள். நண்பர்களின் உதவியினால் வியாபார பணிகளில் முன்னேற்றமான சூழ்நிலை காணப்படும். பயணங்களின் மூலம் அனுகூலமான பலன்கள் உண்டாகும். நிலுவையில் இருந்துவந்த பணிகள் மற்றும் தனம் தொடர்பான பிரச்சனைகளுக்கு தீர்வுகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

விசாகம் : தனவரவுகள் கிடைக்கும்.
அனுஷம் : அனுகூலமான நாள்.
கேட்டை : காரியசித்தி உண்டாகும்.

தனுசு

விலகி சென்றவர்கள் விரும்பி வருவார்கள். தாய்மாமன் வழியில் ஆதரவான சூழ்நிலைகள் காணப்படும். உடல் அளவில் இருந்துவந்த இன்னல்கள் குறையும். வர்த்தக பணிகளில் நிதானத்துடன் முடிவெடுக்கவும். குடும்ப உறுப்பினர்களிடம் அனுசரித்து செல்வதன் மூலம் சாதகமான பலன்கள் ஏற்படும். சமூக பணிகளில் இருப்பவர்களுக்கு சுபச்செய்திகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : அடர் நீலம்

மூலம் : ஆதரவுகள் கிடைக்கும்.
பூராடம் : நிதானம் வேண்டும்.
உத்திராடம் : சுபமான நாள்.

மகரம்

குடும்ப பொருளாதாரத்தில் ஏற்ற, இறக்கமான சூழ்நிலைகள் காணப்படும். அனுபவம் உள்ளவர்களின் ஆலோசனைகள் மனதிற்கு தெளிவினை ஏற்படுத்தும். உத்தியோக பணிகளில் இருந்துவந்த பொறுப்புகள் குறையும். கடன் தொடர்பான பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். அரசு சார்ந்த செயல்பாடுகளில் அலைச்சல்கள் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு

உத்திராடம் : ஆலோசனைகள் கிடைக்கும்.
திருவோணம் : பொறுப்புகள் குறையும்.
அவிட்டம் : அனுபவம் மேம்படும்.

கும்பம்

உறவினர்களின் வழியில் ஒற்றுமையும், மகிழ்ச்சியும் ஏற்படும். வெளிவட்டாரங்களில் உங்களின் மீதான நன்மதிப்புகள் அதிகரிக்கும். வியாபார பணிகளில் லாபம் ஏற்படும். வெளியூர் தொடர்பான பயணங்களில் மேன்மையான சூழ்நிலைகள் காணப்படும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

அவிட்டம் : மதிப்புகள் அதிகரிக்கும்.
சதயம் : மேன்மையான நாள்.
பூரட்டாதி : முன்னேற்றம் ஏற்படும்.

மீனம்

எண்ணிய காரியங்களை எண்ணிய விதத்தில் செய்து முடிப்பீர்கள். அக்கம்-பக்கம் இருப்பவர்களிடம் அனுசரித்து செல்லவும். வியாபார பணிகளில் லாபகரமான சூழ்நிலைகள் காணப்படும். எதிர்பாராத சில பயணங்களின் மூலம் மனதில் மாற்றமும், தன்னம்பிக்கையும் ஏற்படும். உடன்பிறந்தவர்களிடம் விட்டுக்கொடுத்து செல்லவும். எதிர்பாராத சில இடமாற்றங்களால் திறமைகளை வெளிப்படுத்துவதற்கான சூழ்நிலைகள் உருவாகும்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் சிவப்பு

பூரட்டாதி : அனுசரித்து செல்லவும்.
உத்திரட்டாதி : தன்னம்பிக்கை ஏற்படும்.
ரேவதி : திறமைகள் வெளிப்படும்.

Show More

9,288 Comments

  1. [url=https://buycialis5mgtabs.quest/]cialis price australia[/url] [url=https://cialisbesttabssale.quest/]buy genuine cialis uk[/url] [url=https://onlineviagratabletsforsale.quest/]can you buy generic viagra over the counter in canada[/url] [url=https://buycialiswithoutrx.monster/]buy female cialis online[/url] [url=https://bestviagra150price.quest/]viagra canadian pharmacy[/url] [url=https://bestviagratabsorder.monster/]generic viagra price canada[/url] [url=https://viagragenerictabletshop.monster/]sildenafil prescription discount[/url] [url=https://genericcialistabletforsaleonline.quest/]daily cialis canadian pharmacy[/url] [url=https://bestcialis40withoutrx.monster/]cialis daily online pharmacy[/url] [url=https://buyviagradrugstore.quest/]over the counter viagra[/url]