சினிமா

தனுஷ் நடிக்கும் ஹாலிவுட் படத்தில் இணைந்த இந்திய நடிகை.!

தனுஷ் நடிக்கும் ‘தி கிரே மேன்’ ஹாலிவுட் படத்தில் இந்திய நடிகை நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நெட்பிலிக்சில் அவெஞ்சர்ஸ் இயக்குனர்கள் இயக்கம் ‘தி கிரே மேன்’ என்ற ஹாலிவுட் படத்தில் தமிழ் நடிகர் தனுஷ் நடிக்க உள்ளதாக ஏற்கனவே தகவல் வெளியானது. தற்போது இந்தப்படத்தின் படப்பிடிப்பு அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது.

தற்போது ‘தி கிரே மேன்’ படத்தின் கதாபாத்திரங்கள் பற்றிய விவரங்களை எழுத்தாளர் மார்க் டிரெய்னி கூறியுள்ளார். இந்த படத்தில் கோர்ட் ஜென்ட்ரி மற்றும் ரயான் காஸ்ஸிங் ஆகிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். மேலும், அவரை கொலை செய்ய நினைக்கும் குழுவின் தலைவராக தனுஷ் நடிக்க உள்ளதாக கூறியுள்ளார்.

இந்நிலையில் தற்போது இந்த படத்தில் பாலிவுட் நடிகையான ஐஸ்வர்யா சோனார் என்ற நடிகை ‘தி கிரே மேன்’ படத்தில் நடிக்க உள்ளார். இதனையடுத்து இவர் தற்போது படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளாராம்.

Show More
Back to top button