தமிழகம்
Trending

நாளை முதல் கொரோனா தடுப்புப் பணிகளை மேற்கொள்ளும் ஸ்டாலின்.!! தொண்டர்களுக்கு வேண்டுகோள்.!!!

தமிழகத்தில் தற்போது கொரோனா தொற்றின் இரண்டாவது அலை தீவிரமடைந்துள்ளதால், நாளுக்கு நாள் கொரோனா தொற்றின் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் தமிழகத்தில் முதலில் இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு என அறிவித்தது. அதன்பிறகு, மே 10ஆம் தேதி முதல் மே 24ஆம் தேதி வரை முழு ஊரடங்கை பிறப்பித்தது தமிழக அரசு.

இந்நிலையில் தமிழக முதல்வர்
மு.க.ஸ்டாலின் நாளை முதல் சேலம், நாமக்கல், கோவை, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து நேரில் ஆய்வு மேற்கொள்ள உள்ளார். இதனால் ஸ்டாலின் திமுக தொண்டர்களுக்கு கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார். அதில் கொரோனா தடுப்பு மற்றும் நிவாரண பணிகளை மேற்கொள்ளும் போது தொண்டர்கள் யாரும் என்னை சந்திக்க வேண்டாம் என கூறியுள்ளார்.

மேலும், தமிழக முதல்வர் ஸ்டாலின்
தான் தங்குமிடங்களில் தன்னை சந்திக்க யாரும் முயற்சிக்க வேண்டாம் எனவும், எனக்கு வரவேற்பு தரும் எண்ணத்தில் பேனர்கள், கட்சிக் கொடிகள் மற்றும் போஸ்டர்கள் வைப்பதை தவிர்க்க வேண்டும் எனவும் கூறியுள்ளார். மேலும்,
“ஒன்றிணைவோம் வா” திட்டத்தின் மூலம் மக்களின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்யுமாறும் கூறியுள்ளார்.

Show More
Back to top button