அரசியல்
Trending

கருணாநிதியின் பிறந்த நாளையொட்டி; தமிழக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அதிரடி அறிவிப்புகள்.!!!

நேற்று மறைந்த முன்னாள் திமுக தலைவர் மற்றும் முதல்வர் கருணாநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பல்வேறு திட்டங்களை அறிவித்துள்ளார்.

மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் 98-வது பிறந்த நாளை தமிழகம் முழுவதும் திமுக தொண்டர்கள் கொண்டாடினர். மேலும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் வாழ்த்துக்களை தெரிவித்திருந்தனர்.

முன்னாள் திமுக தலைவர் கருணாநிதியின் பிறந்த நாளையொட்டி 2வது தவணையாக 2 ஆயிரம் ரூபாய் மற்றும் 15 பொருட்கள் அடங்கிய மளிகை பொருட்கள் ரேஷன் கடைகளில் வழங்குதல் மற்றும் 38 ஆயிரம் மரக் கன்றுகள் நடப்பட்டுள்ளது. மேலும் பல்வேறு திட்டங்களையும் தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

1.திருவாரூர் மாவட்டத்தில் 30 கோடி மதிப்பீட்டில் நெல் சேமிப்பு கிடங்கு அமைக்கப்படும்.

2.மாற்றுத்திறனாளிகள் மற்றும் திருநங்கைகளுக்கு அரசுப் பேருந்துகளில் இலவசமாக பயணிக்க அனுமதி.

3.தென்சென்னையில் ரூ.250 கோடி செலவில் 500 படுக்கை வசதிகளுடன் கூடிய சிறப்பு பல்நோக்கு மருத்துவமனை கட்டப்படும்.

4.மதுரை மாவட்டத்தில் 70 கோடி செலவில் கலைஞர் நூலகம் அமைக்கப்படும்

5.ஞானபீடம், சாகித்ய அகாதமி போன்ற தேசிய விருதுகள், மாநில இலக்கிய விருதுகள் மற்றும் புகழ்பெற்ற உலகளாவிய அமைப்புகளின் விருது பெற்ற கவிஞர்களுக்கு அவர்கள் வசிக்கும் மாவட்டத்தில் அல்லது அவர்கள் விரும்பும் மாவட்டத்தில் தமிழக அரசின் மூலம் வீடு வழங்கப்படும்.

Show More
Back to top button