Breaking Newsஅரசியல்தமிழகம்
Trending

நீண்ட இழுபறிக்குப் பின்னர் கமலஹாசனை தோற்கடித்த வானதி சீனிவாசன்.!!!

கோவை தெற்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன் வெற்றி பெற்றுள்ளார்.

தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி தேதி நடைபெற்ற சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணும் பணி இன்று காலை 8 மணி முதல் 75 வாக்கு எண்ணும் மையங்களில் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில் தற்போதைய தகவலின்படி திமுக 130 தொகுதிகளிலும், அதிமுக 70 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளது. இதில் கோவை தெற்கு தொகுதியில் மக்கள் நீதி மையம் கட்சி தலைவர் கமலஹாசன், பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன் காலையிலிருந்தே இழுபறியில் இருந்து வந்தது.

இந்நிலையில் தற்போது கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்ட மக்கள் நீதி மையம் தலைவர் கமலஹாசன் விட 1500 வாக்குகள் அதிகம் பெற்று பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன் வெற்றிபெற்றுள்ளார்.

Show More
Back to top button