Breaking Newsவிளையாட்டு

மீதமுள்ள ஐபிஎல் போட்டிகள் யுஏஇ-ல் ஆரம்பம்: பிசிசிஐ அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!!!

இந்தியாவில் நடைபெற்று வந்த 14 வது சீசன் ஐபிஎல் மீதமுள்ள கிரிக்கெட் போட்டிகள் யுஎஇல் நடைபெறுவதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.

கடந்த மாதம் ஏப்ரல் 9ம் தேதி முதல் இந்த ஆண்டுக்கான 14 வது சீசன் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் சென்னையில் ஆரம்பமானது. இதுவரையில் 29 லீக் போட்டிகள் நடைபெற்றுள்ளது.

தற்போது இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை மிகத் தீவிரமடைந்துள்ளதால், ஐபிஎல் கிரிக்கெட் டி20 தொடர் தற்காலிகமாக தள்ளி வைக்கப்படுவதாக பிசிசிஐ தலைவர் கங்குலி தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இந்தியாவில் நடைபெற்று வந்த ஐபிஎல் 14வது சீசன் மீதமுள்ள கிரிக்கெட் போட்டிகள யுஏஇல் நடைபெறும் என பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.இந்தப் போட்டிகள் செப்டம்பர் மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Show More
Back to top button