சினிமா

ஜிவி பிரகாஷை இயக்கும் சீனு ராமசாமி.!! அறிவிப்பு வெளியாவதற்குள் சூடுபிடிக்கும் வியாபாரம்.!!

இயக்குனர் சீனு ராமசாமி இயக்கத்தில் ஜி வி பிரகாஷ் குமார் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இயக்குனர் சீனு ராமசாமி இயக்கும் புதிய படத்தை தயாரிப்பாளர் முபாரக் தயாரிக்கிறார். இன்னும் இந்த படத்திற்கு பெயர் கூட வைக்கவில்லை. ஆகஸ்ட் 2ஆம் தேதி இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்க உள்ளது. இந்த படத்தில் ஹீரோவாக நடிகர் ஜிவி பிரகாஷ் குமாரும், காயத்ரி சங்கரும் நடிக்கின்றனர். மேலும், எம்.எஸ். பாஸ்கர், கஞ்சாகருப்பு உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர்.

இயக்குனர் சீனு ராமசாமி சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் இந்த படம் ஆக்ஷன் நிறைந்த த்ரில்லர் கதைக்களத்தை முதல்முறையாக கிராமத்தில் உருவாக்கியுள்ளதாக கூறியுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு தேனி, ஆண்டிப்பட்டி மற்றும் கொடைக்கானலில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த படத்திற்கு ரகுநந்தன் இசையமைக்கிறார். மேலும், வைரமுத்து பாடல் எழுதுகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்குவதற்குள் வியாபாரம் சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது. அதற்குள் 2 ஒடிடி நிறுவனங்கள் படத்தை வாங்க போட்டி போட்டு வருவதாகவும் கூறியுள்ளார. மேலும், இந்தப் படத்தை தியேட்டரில் ரிலீஸ் செய்வதா அல்லது ஓடிடியில் ரிலீஸ் செய்வதா என இன்னும் முடிவு செய்யவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

Show More
Back to top button